வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மின் விபத்துகளை தவிர்க்கமுன் எச்சரிக்கை பாதுகாப்பு குறிப்பு:

by Editor / 24-11-2021 11:50:24am
வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மின் விபத்துகளை தவிர்க்கமுன் எச்சரிக்கை  பாதுகாப்பு குறிப்பு:

▪வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில்  மின் விபத்துகளை தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்▪மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். 

▪பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும்
. ▪மின்கசிவு தடுப்பானை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்சு போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க வேண்டும்..▪ உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்ற வேண்டும்.

பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். டி.வி. ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மின் கம்பிகளுக்கு அருகில் கட்டாதீர்கள். டி.வி. ஆண்டனாவின் வயரை மின் கம்பத்தில் கட்ட வேண்டாம். 
▪கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. 
▪ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும், ▪சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும் ▪ மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள கம்பி மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். ▪குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவற்றின் உட்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. வைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும். ▪மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.

மின் கம்பங்களை பந்தல்களாவோ, அதன் மீது விளம்பர பலகைகளையோ கட்டக்கூடாது. 
▪மழைகாலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லக் கூடாது. ▪மழையாலும், பெரும் காற்றாலும் அறுந்து விழுந்த மின் கம்பி அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். 
▪மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும். மின்வாரிய மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லக் கூடாது.

▪மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். ▪அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும். ▪இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்கக் கூடாது. கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு, போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக்கூடாது.

▪இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். தஞ்சமடைய அருகில் ஏதும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.▪ இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ▪திறந்த வெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது. வேறு ஏதேனும் மின்சாரம் சம்பந்தமாக உதவி தேவைப்பட்டால் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் மின்னகம் 94 987 94 987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,▪சமுக நலன் கருதி வெளியிடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

▪வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில்  மின் விபத்துகளை தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்▪மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். 

▪பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும்
. ▪மின்கசிவு தடுப்பானை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்சு போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க வேண்டும்..▪ உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்ற வேண்டும்.

பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். டி.வி. ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மின் கம்பிகளுக்கு அருகில் கட்டாதீர்கள். டி.வி. ஆண்டனாவின் வயரை மின் கம்பத்தில் கட்ட வேண்டாம். 
▪கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. 
▪ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும், ▪சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும் ▪ மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள கம்பி மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். ▪குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவற்றின் உட்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. வைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும். ▪மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.

மின் கம்பங்களை பந்தல்களாவோ, அதன் மீது விளம்பர பலகைகளையோ கட்டக்கூடாது. 
▪மழைகாலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லக் கூடாது. ▪மழையாலும், பெரும் காற்றாலும் அறுந்து விழுந்த மின் கம்பி அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். 
▪மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும். மின்வாரிய மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லக் கூடாது.

▪மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். ▪அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும். ▪இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்கக் கூடாது. கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு, போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக்கூடாது.

▪இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். தஞ்சமடைய அருகில் ஏதும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.▪ இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ▪திறந்த வெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது. வேறு ஏதேனும் மின்சாரம் சம்பந்தமாக உதவி தேவைப்பட்டால் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் மின்னகம் 94 987 94 987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,▪சமுக நலன் கருதி வெளியிடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.

Tags :

Share via