கருணாநிதி அறக்கட்டளை - 8 பேருக்கு மருத்துவ உதவி

by Staff / 10-05-2024 03:17:15pm
கருணாநிதி அறக்கட்டளை - 8 பேருக்கு மருத்துவ உதவி

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வட்டித் தொகையினைக் கொண்டு மாதம் தோறும் ஏழை எளியோருக்கு உதவித் தொகையாக 2005ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

Tags :

Share via