21 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

by Editor / 16-10-2023 08:56:09am
21 மாவட்டங்களில் இன்று  இடி மின்னலுடன் கூடிய  மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கள்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர், மதுரை, திருப்பூர், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : 21 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Share via