அழகுமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அச்சத்தில் மக்கள்

by Editor / 16-10-2023 09:03:08am
அழகுமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அச்சத்தில் மக்கள்

திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த மலை பாளையம் கிராமம் உள்ளது இந்த பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் தோட்டத்தில் இன்று மாலை கன்று குட்டி மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த நிலையில் திடீரென்று கன்று குட்டி அலறல் சத்தம் கேட்டுள்ளது பின்னர் அங்கு வேலை செய்யும் வட மாநில தொழிலாளியான விஜய் நேரில் சென்று பார்த்தபோது உடலில் நக காயங்கள் இருந்துள்ளது பின்னர் நாய் கடித்திருக்குமோ என்ற எண்ணத்தில் பெரிதாக எண்ணாமல் மருத்துவருக்கு தகவல் சொல்லிவிட்டு அவர் தோட்டத்து வேளையில் ஈடுபட்டிருந்தார் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கன்று குட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது அப்போது கன்று குட்டிக்கு அருகில் சிறுத்தை இருந்ததைக் கண்ட வட மாநில தொழிலாளி விஜய் கூச்சலிட்டு கொண்டு தோட்டத்தில் இருந்து வெளியே வந்தார் இந்த நிலையில் தோட்டத்து உரிமையாளர் உடனே சென்று பார்த்த போது அங்கிருந்து சிறுத்தை அங்கிருந்து மாயமாகிறது பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர் கூடிய நிலையில் வனத்துறையினர் மற்றும் அவிநாசி பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கன்று குட்டியை ஆய்வு செய்து அந்த தோட்டம் முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்ன ஆய்வு செய்தனர் 

 

Tags : அழகுமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அச்சத்தில் மக்கள்

Share via