அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் திடீர் ரத்து

by Admin / 02-05-2023 10:44:06pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் திடீர் ரத்து

 

 அதிமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு,' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் 04.5 2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம் அம்மா அரங்கத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான மறைந்த திரு துணைக்கண்ணு அவர்களின் மாா்பளவு வெண்கல சிலை திறப்பு விழாவிலும் அதனை தொடர்ந்து ஓரத்த நாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக இருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கன மழை பெய்து வரும் நிலையில் மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு 15 5 2023 திங்கள்கிழமை அன்று நடைபெறும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் திடீர் ரத்து
 

Tags :

Share via