மனைவியை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த கணவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

by Editor / 23-05-2023 09:01:51pm
மனைவியை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த கணவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

 தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் கலைஞர் காலனி பகுதியைச் சார்ந்தவர் சந்தன குமார் இவருக்கு கௌசல்யா என்கின்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி கோவில் கொடை விழா அந்த பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. கோவில் கொடை விழாவுக்கு மனைவி கணவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து விட்டு கோவிலுக்கு செல்ல முற்பட்டுள்ளார். அப்பொழுது சந்தனகுமார் மனைவியிடம் எனக்கு சாப்பாடு பரிமாறிய பின்பு நீ கோவிலுக்கு செல்லலாம் என்று கூறவே இல்லை சாப்பாடு எடுத்துவைத்துவிட்டேன் நீங்கள் சாப்பிடுங்க எனக்கூறி கோவிலுக்கு செல்கிறேன் என கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கணவன் சந்தனக்குமார்  கோவிலுக்கு நீ சென்றால் உன்னை கொன்று விடுவேன் என மனைவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மனைவி கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்ட எடுத்து மனைவியை நோக்கி சந்தனகுமார் எரிந்துள்ளார் இதில் நாட்டு வெடிகுண்டு வீட்டின் சுவரில் பட்டு தெறித்ததில் கௌசல்யாவின் தலை உள்ளிட்டு சில பகுதிகளில் வெடிகுண்டு பட்டு வெடித்தது. இதில் கௌசல்யாவின் தலையில் பலத்த காயம் அடைந்து உடனடியாக அவர் ரத்தவெள்ளத்தில் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து கவுசல்யா தென்காசி அரசு மருத்துவமனையில் பெண்கள் தனி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் உடனடியாக தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சந்தனகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.இதன் தொடர்ச்சியாக சந்தனகுமாரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், அறிவுறுத்தியதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர்துரைரவிச்சந்திரன்  உத்தரவின் பேரில்  சந்தனகுமாரை  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர்  சமர்பித்தார்.

 

Tags :

Share via