ரூ.33 இலட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்று மோசடி செய்த நபர் கைது.

by Editor / 27-07-2023 09:20:07pm
 ரூ.33 இலட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்று மோசடி செய்த நபர் கைது.

திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிகரிசல்குளம், முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தப்பன் (78) என்பவர் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். அதேபோல் வி.கே.புரம், ஆறுமுகம்பட்டி, பாத்திமா தெருவை சேர்ந்த அருள் பாஸ்கர்(42) என்பவர் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் உரிமம் பெற்று தொழில் செய்து வருவதால் அரிசியை இலங்கைக்கு அனுப்புவதற்காக கந்தப்பன் ரூபாய் 33 இலட்சத்து 50 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பின் கந்தப்பனுடைய பணத்தை முதலீடு செய்யாமல் அருள்பாஸ்கர் மோசடி செய்து ஏமாற்றியுள்ளார். மேற்படி எதிரி அருள்பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கந்தப்பன் என்பவர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்ட பின்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிலம்பரசன்  புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன்‌‌.ரகு,  மேற்பார்வையில்  குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  முத்து,  தலைமையிலான  சார்பு ஆய்வாளர் பவுல்  சிறப்பு சார்பு ஆய்வாளர்  சுப்பிரமணியன்  தலைமை காவலர்  ஜான் போஸ்கோ, முதல் நிலை பெண் காவலர்  கனகவள்ளி, இரண்டாம் நிலை காவலர் மலையரசன் ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் எதிரியை கைது செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு,  எதிரியான அருள்பாஸ்கரை இன்று கைது செய்தனர்.

 

Tags :

Share via