விக்ரம் பட இயக்குனர்-உதவி இயக்குனர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கமல்

by Admin / 08-06-2022 08:26:56am
விக்ரம் பட இயக்குனர்-உதவி இயக்குனர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கமல்
 

விக்ரம் படம் கமல்ஹாசனின் நான்காண்டு இடைவெளிக்கு பின்பு வந்த படம் .பான் இந்தியா படமாகரசிகர்களால்கொண்டாடப்படும் படம். ஆர்.ஆர்.ஆர்.,கே.ஜி.எப்.. படத்திற்கு அடுத்து வந்து அதேஅளவில்ரசிகர்களுக்குத்தீனி போட்டு ,வசூலையும் வாரி சுருட்டிக்கொண்டிருக்கும் படம்.அரசியல் தந்த அடியிலிருந்து மீண்டு ஒரு புத்தெழுச்சியை கமலுக்குவழங்கி...நம்பிக்கை தந்திருக்கும் படம்.இப்படம் அவர் திரையுலக வாழ்வில் ஓரு மைல்கல்.இம் மகிழ்ச்சியை தந்ததற்குகாரணம் இயக்குனர் -உதவி இயக்குனர்கள்தான் என்பதை முடிவு செய்த கமல் ..அவர்களை திக்குமுக்காட வைக்க நினைத்து,60-70லட்சம் மதிப்பிலான காரை ..லோகேஷ்க்கு   வழங்கியதோடு...,உதவி இயக்குனர்களுக்கு ஒன்னே கால்லட்ச அளவில் பைக்கை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.இது போன்ற நிகழ்வு திரைத்துறையில் புதிதன்று.
    ரமணா பட வெற்றியைக்கொண்டாடும் விதமாக விஜயகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சேன்ட்ரோ காரைவழங்கினார். வாலி வெற்றியைக்கொண்டாடும் விதமாக  அஜித்குமார்..இயக்குனர் எஸ்.ஏ.சூர்யாவிற்கு தி.நகர்இந்திபிரச்சார சபா அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்கிக்கொடுத்தது. பதினைந்து ஆண்டுக்களுக்கு முந்தைய கதை....இது மீண்டும்கமல்ஹாசனால் புதுப்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே....
 

Tags :

Share via