பெங்களூர் -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஜூலை எட்டாம் தேதி வரை நீட்டிப்பு.

by Editor / 25-05-2023 09:29:31am
பெங்களூர் -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஜூலை எட்டாம் தேதி வரை நீட்டிப்பு.

பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
 இந்த ரயில் ஜூலை மாதம் எட்டாம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூர் -வேளாங்கண்ணி சிறப்பு வார ரயில் சனி தோறும் காலை 7 .50 மணிக்கு பெங்களூரில் புறப்பட்டு சேலம் மற்றும் நாமக்கல் ,கரூர் வழியே அன்று இரவு 7 மணி அளவில் வேளாங்கண்ணியை சென்றடையும்,அதுபோல் மறு மார்க்கத்தில் சனி இரவு 11.55 மணிக்கு ரயில் புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.இந்த ரயில்களுக்கு பயணியர் இடையே வரவேற்பு அதிகம் உள்ளதால்,
 ஜூலை எட்டாம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் செய்தி குறிப்பில்  தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via