தமிழ் பத்திரிகை ஜாம்பவான்  மாலைமுரசு வி. ராமசாமி மறைந்தார்.

by Editor / 17-07-2021 06:35:41pm
தமிழ் பத்திரிகை ஜாம்பவான்  மாலைமுரசு வி. ராமசாமி மறைந்தார்.

 


மாலைமுரசு (சென்னை பதிப்பு) ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, ஓய்வு பெற்றிருந்த  வி. ராமசாமி  (87) சனிக்கிழமை  பிற்பகல் 2.30 மணியளவில் சென்னையில்  இயற்கை எய்தினார். வயது மூப்பின் விளைவாக, சிலநாட்களாக  உடல் நலம் குன்றியிருந்தார்.
"தலைப்பு போடுவதில் மன்னன்" என்று பெயர் பெற்றவர். காலம் தவறாமை, குறுகிய காலத்தில் விரைவாக செயல்பட்டு குறித்த நேரத்தில் பத்திரிக்கையை வெளிக்கொண்டுவரும் ஆளுமைத்திறன் கொண்டிருந்தவர்.  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், அவரைத் தொடர்ந்து பா. ராமச்சந்திர ஆதித்தனார் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளராக திகழ்ந்தார்.
முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். அவருடைய பாராட்டுதல்களை நிரம்ப பெற்றவர்.  இப்போது உள்ள வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை தொலைபேசியில் கொடுக்கும் செய்தியாளர்களின் தகவல்களை மின்னல் வேகத்தில் எழுதி டைப்பிங் பிரிவுக்கு அனுப்புவதில் அசகாய சூரராகத் திகழ்ந்தார்.
மறைந்த ஆசிரியர் இராமசாமி அவர்களுக்கு மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்

 

Tags :

Share via