10 அடிநீளமுள்ள ராஜ நாகம் பிடிப்பட்டது.

by Editor / 28-05-2023 11:32:17am
10 அடிநீளமுள்ள ராஜ நாகம் பிடிப்பட்டது.

தமிழக கேரளா எல்லையான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை வன விலங்குகளும் ஊர்வனை வகையை சார்ந்தவைகளும் நிரம்பி காணப்படுகின்றன. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் அருகிலுள்ள கேரளமாநிலம் தென்மலை பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் உள்ள காலையக்கரை பள்ளி அருகே 10 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று உலா வருவதாக வனத்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விரைந்து வந்த வனத்துறையினர் கொடிய விஷமுள்ள 10 அடி நீளமுள்ள ராட்சச ராஜ நாகத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் சுமார் 1மணிநேர  போராட்டத்திற்கு பிறகு ராஜ நாகத்தை மிகவும் லாகபகமாக அதன் வாலை பிடித்த வனத்துறையினர் பின்பு அதனை பைப்மூலம் பைக்குள் அடைத்து கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர் இறுதியாக நூதன  முயற்சியோடு ராஜ நாகத்தை பைப் வழியாக நுழைய வைத்து அதனை சாமர்த்தியமாக பிடித்து தென்மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டுச் சென்றனர் இதன் காரணமாக அந்த பகுதியில் நீடித்த பரபரப்பு மூடிவுக்கு வந்தது.

 

Tags :

Share via