மிக மோசமான ரயில் விபத்து: தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம் கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 03-06-2023 09:33:02am
மிக மோசமான ரயில் விபத்து: தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம்  கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவை புரட்டி போட்ட ஒடிசா ரயில் விபத்து.1999க்கு பிறகு இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக, ஒடிசா பாலாஷோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது; தற்போது வரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்பு.1999ல் அசாமின் கைசால் பகுதியில், 2,500 பேர் பயணம் செய்த 2 ரயில்கள் மோதி. விபத்துக்கு உள்ளானதில் 285 பயணிகள் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.அவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ரத்ததானம் வழங்குவதற்காக குவிந்த உள்ளூர் இளைஞர்கள்.ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம் காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 

 

Tags :

Share via

More stories

Logo