பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்து நாட்டின் மிகச்சிறந்த விருது  ஆா்டா் ஆப் தி நைல் விருது வழங்கப்பட்டது

by Admin / 26-06-2023 08:45:35am
பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்து நாட்டின் மிகச்சிறந்த விருது  ஆா்டா் ஆப் தி நைல் விருது வழங்கப்பட்டது எகிப்து நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி நைல் விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்து நாட்டு அதிபர் சிசி வழங்கி கௌரவப்படுத்தினார்..<br /> <br /> &nbsp;இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு மிக உற்சாகமான வரவேற்பை அந்நாட்டு அரசு வழங்கியதோடு அமெரிக்க பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாக சொற்பொழிவு ஆற்றினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிரைடல் வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து அளித்ததோடு அமெரிக்க இந்திய அரசின் இரு தரப்பு பெயர் பேச்சு வார்த்தையையும் மேற்கொண்டனர். அமெரிக்க பயணத்தை அடுத்து இந்திய பிரதமர் தனி விமானத்தில் எகிப்து நாட்டிற்கு சென்றார் எகிப்து நாட்டிற்கு 26 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய பிரதமர் செல்வது இது முதல் முறையாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியைஎகிப்து பிரதமர் முஸ்தபா விமான நிலையத்திற்கு&nbsp; சென்று நேரில் வரவேற்றார்&nbsp; என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் எகிப்தினுடைய ஹெலியோ போலீஸ் போர்&nbsp; நினைவிடத்தில்&nbsp; மரியாதை செலுத்தியதோடு&nbsp; வீர மரணம் அடைந்த 3799 இந்திய படை வீரர்களின்&nbsp; நினைவுச் சின்னத்தையும் பார்வையிட்டார். அதன் பின்னர் அல்ஹகீம் மசூதியை பார்வையிட்டதோ டு அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்&nbsp; .இதனை அடுத்து பிரதமர் மோடி கைரோம் மசூதிக்கு சென்று அங்கிருந்த இஸ்லாமிய பெரியோர்களுடன்&nbsp; கலந்துரையாடினார் .இந்நிகழ்வை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்து நாட்டின் மிகச்சிறந்த விருது என்று அழைக்கப்படும் &nbsp; ஆா்டா்ஆப் தி நைல் விருது வழங்கப்பட்டது.&nbsp; இவ்விருதை அந்நாட்டு அதிபர் சி சி வழங்கி கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. &nbsp; பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்து நாட்டின் மிகச்சிறந்த விருது  ஆா்டா் ஆப் தி நைல் விருது வழங்கப்பட்டது
 

Tags :

Share via