ரயில்கள் ரத்து

by Editor / 26-06-2023 08:51:19am
ரயில்கள் ரத்து இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. பஹாங்கா பஜார் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால் காரக்பூர் - பத்ரக் வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாலிமார் - ஹைதராபாத் (18045), செகந்திராபாத் - திப்ருகார் (07046), செகந்திராபாத் - அகர்தலா, திருப்பதி - சந்த்ராகாச்சி, ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், சந்த்ராகாச்சி - தாம்பரம் (22841), எர்ணாகுளம் - ஹாவ் (22878) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

Tags :

Share via