கேரளாவில் விஷக்காய்ச்சல்: எல்லையோர பகுதிகளில் ஆய்வு.

by Staff / 06-07-2023 10:02:09am
கேரளாவில் விஷக்காய்ச்சல்:  எல்லையோர பகுதிகளில் ஆய்வு. கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் விஷ காய்ச்சல் பரவி பலர் உயிரிழந்து வருகின்றனர்.இந்த விஷ காய்ச்சல் குமரி மாவட்டத்திலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.அதன்படி தமிழக-கேரள எல்லையை ஒட்டி உள்ள கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சுகாதார பணியாளர்கள் சென்று ஆய்வு செய்தனர். டயர்கள், காலி பாட்டில்கள் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்கி உள்ளதா? என்று பார்த்து, அவ்வாறு மழைநீர் ேதங்கி இருக்கும் டயர்களில் உள்ள நீரை அகற்றி கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் மருந்து தெளித்து வருகிறார்கள்.மேலும் வீடுகள் மற்றும் பழைய இரும்பு கடை, வணிக நிறுவனங்களில் தேவையில்லாத டயர், உடைந்த பாட்டில் போன்றவற்றில் மழைநீர் தேங்கினால் அதில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் உண்டாகும். எனவே மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளும்படி சுகாதார பணியாளர்கள் கூறி சென்றனர்.
 

Tags :

Share via