கவலையை மறக்க இங்க வந்து அழுதுட்டு போங்க!

by Editor / 18-10-2021 06:15:13pm
கவலையை மறக்க இங்க வந்து அழுதுட்டு போங்க!

 

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிக் நகரில், "அழுகை அறை" என்ற வினோத அறையானது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அறைக்குள் சென்றதும் "அழுகை அறைக்கு வரவேற்கிறோம்" என்ற வாசகத்துடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த அறையின் நோக்கம், மனநல பிரச்சனையின் காரணமாக அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்க புதிய முயற்சியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மனதில் உள்ள கவலைகள் தீரும் வகையிலும், மனந்திறந்து அழவும் அழுகை அறைகள் உதவுகிறது.


மேலும், அறையின் ஒருபுறத்தில் உளவியல் நிபுணர்களை தொடர்பு கொண்டு பேசி, தங்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மனநல பராமரிப்பு இயக்கம் என்ற விஷயத்தை ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்தார்.


இந்த திட்டத்திற்கு 100 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்த நிலையில், 24 மணிநேரமும் தற்கொலை தடுப்பு உதவி சேவை செய்யப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தில் 3,671 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via