ஆவின் 5 வகை இனிப்பு ‘தீபாவளி’ ஸ்பெஷல் அமைச்சர் நாசர் விற்பனையை துவக்கினார் 

by Editor / 11-10-2021 04:11:54pm
ஆவின் 5 வகை இனிப்பு ‘தீபாவளி’ ஸ்பெஷல் அமைச்சர் நாசர் விற்பனையை துவக்கினார் 


சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அடுத்த மாதம் (நவம்பர்) 4 ந் தேதி வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் 5 வகை சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து விற்பனையை துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை கூடுதல் தலைமை செய லாளர் ஜவஹர், ஆவின் மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, இணை நிர்வாக இயக்குனர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஆவின் நிறுவனம் வியாபார நோக்க மின்றி பொதுமக்களுக்கு சேவை செய்யும் உணர்வோடு செயலாற்றி வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (நவம்பர் 4 ந் தேதி) சுவைமிகுந்த சிறப்பு இனிப்புகளான

* காஜூ கட்லீ (250 கி) -ரூ.225

* நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.210

* மோத்தி பாக் (250 கி) -ரூ.170

* காஜு பிஸ்தா ரோல்(250 கி) -ரூ.275

* காபி மில்க் பர்பி (250 கி) - ரூ.210

ஆகிய 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பை (Combo Box) (500 கி) -ரூ.425 விலையில் அறிமுகம் செய்து விற்பனையை தொடக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன். ரூ.1.2 கோடி லாபம்
கடந்த ஆண்டு இனிப்பு வகைகளில் 15 டன் விற்பனை செய்திருக்கின்றோம். இதன் மூலம் கடந்த ஆண்டு ரூ.1.2 கோடி லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு அதிக விற்பனை என்ற நோக்கத்தோடு 25 டன் இலக்கை நாம் வைத்திருக்கின்றோம். 2.2 கோடிக்கு இதை உயர்த்தவும் அதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.


பொதுவாக ஓட்டலில் வருபவர்களை நன்றாக வரவேற்பார்கள், இதை சாப்பிடுங்கள், அதை சாப்பிடுங்கள் என்று கடைசியில் பில்லை போடும் போது மிஞ்சுவார் இது வியாபார நோக்கம், ஆனால் ஆவின் வியாபார நோக்கமில்லை, ஆனால் தனியார் பால் கொள்முதல் விலை ரூ.25 முதல் ரூ.28 வரை எந்த அளவுக்கு வாங்க முடியுமோ அந்த அளவுக்கு வாங்குகின்றனர்.


ஆனால் நம்மை பொறுத்தவரை லிட்டருக்கு ரூ.32க்கு வாங்குகிறோம். லிட்டருக்கு ரூ.32க்கு வாங்குவதை 12 லிட்டர் பாலை பிராசஸ் செய்தால் தான் 1 கிலோ பால் பவுடர் கிடைக்கும். அதில் கூடுதலாக ஒரு லாபம் என்னவென்றால் 140 ரூபாய்க்கு வெண்ணெய் கிடைக்கும். நமக்கு ஏற்படக்கூடிய நட்டம் 34 ரூபாய். அவையின்றி பிராசஸிங் காஸ்டு சேர்த்தால் மொத்தமாக ரூ.40 நட்டம்.


கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் தனியார் நிறுவனங்கள் ரூ.25 க்கு கொள்முதல் செய்தபோது நாங்கள் விவசாயிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சரின் கட்டளைக்கிணங்க நாங்கள் வீடுகளுக்கே சென்று ரூ.32 க்கு கொள்முதல் செய்தது மட்டுமின்றி அதை பிராசஸிங் செய்து பொது மக்களுக்கு தங்குதடையின்றி கொடுத்த ஒரே நிறுவனம் ஆவின் நிறுவனம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via