பெண்கள் கலைஞர் உரிமைத் தொகையை யார் யார் பெறலாம்.

by Admin / 08-07-2023 10:18:52am
பெண்கள் கலைஞர் உரிமைத் தொகையை யார் யார் பெறலாம். . . உதவித்தொகை பெற ஆண்டுக்கு இரண்டு லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களாக இருக்க வேண்டும் ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலமும் வைத்திருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்..  ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவா்கள். ஒரு குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர் அனைவரும் ஒரே குடும்பமாக கருதப்படுபவர். .குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் . திருமணமாகாத பெண்கள், விதவைகள். திருநங்கைகள்,தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுபவர். இதன்படி குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டுவோர், வருமான வரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ,பொதுத்துறை நிறுவனஊழியர்கள் ,வங்கி ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு  ஊழியர்கள்,  ஓய்வூதியதாரருக்கு உரிமை தொகையை வழங்கப்படாது. எம்பி, எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி தலைவர்  உறுப்பினர்கள், டிராக்டர், காா்  வைத்துள்ளவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்காது. முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம்  பெரும் குடும்பங்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படாது. .ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். . தங்கள் குடும்பஅட்டை இருக்கும் நியாய விலை கடை விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயர் சூட்டப்படுவதாகவும் செப்டம்பர் 15ஆம் தேதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும்.காணொளி மூலம் பேசிய முதலமைச்சர் தெரிவித்தார். . கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற உன்னதமான திட்டத்தை எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்தி காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்என்றாா். .
 

Tags :

Share via