குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதல்.

by Editor / 08-07-2023 09:29:47am
குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதல். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் பொதுமக்கள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று விடுமுறைத்தினம் என்பதால் தற்போது குற்றால அருவிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.சாரல் மழை பெய்தாலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுதிக்கபட்டுவருகின்றனர்.மேலும் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.போதிய அளவு போலீசார் இல்லாத நிலை அனைத்து அருவிகளிலும் இருந்துவருகிறது. குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதல்.
 

Tags :

Share via

More stories

Logo