முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Editor / 12-07-2023 10:40:11am
முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளன 

1. நெல்லை - பாலக்காடு - நெல்லை (வ.எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும் 

2. சென்னை எழும்பூர் - மதுரை (வ.எண்.12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்

3. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (வ.எண்.22661) ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்

4. நெல்லை - பாலக்காடு (வ.எண்.16791) பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்

5. ராமேஸ்வரம் - பனாரஸ்  (வ.எண்.22535) வாராந்திர ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்

6. சென்னை எழும்பூர் - நெல்லை (வ.எண்.12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்

7. கோவை - ராமேஸ்வரம் (வ.எண்.16618) வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.

8. சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வ.எண்.12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.

9. சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர் (வ.எண்.16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18 நின்று செல்லும்

 

Tags :

Share via