விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்மழை கடல் சீற்றம்.

by Editor / 12-11-2022 09:11:22am
 விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்மழை கடல் சீற்றம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய  பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறதுஇந்த நிலையில் இன்றும் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கோட்டகுப்பம் ,ஆரோவில்,ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளிலும் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்து வருகிறது மேலும் இந்த பகுதியில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக,
கோட்டகுப்பம், மஞ்சக்குப்பம் பொம்மையார்பாளையம் ஆரோவில், ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது இதன் காரணமாக மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.அது மட்டும் அல்லாமல் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறதால் இன்றும் பள்ளி கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல திண்டிவனம்,வானூர்,ஆகிய பகுதிகளும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீரானதுதேங்கியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் நீரானது புகுந்துள்ளதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.


 

 

Tags :

Share via