பெருமைமிக்க அம்மா பிரக்ஞானந்தா

by Editor / 27-08-2023 08:47:21pm
பெருமைமிக்க அம்மா பிரக்ஞானந்தா

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா, தனது வெற்றியை தாயார் நாக லெட்சுமிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், மக்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. வெள்ளிப்பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்து 2024ஆம் ஆண்டுக்கான போட்டிக்குத் தகுதி பெற்றேன். பெருமைமிக்க அம்மா என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பிரக்ஞானந்தா2023

Share via