பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

by Staff / 13-07-2023 01:31:42pm
பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் ஜுலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜுலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 9ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.<br /> &nbsp;
 

Tags :

Share via