இடியுடன் கனமழை - 2600 விமானங்கள் ரத்து

by Staff / 17-07-2023 04:06:19pm
இடியுடன் கனமழை - 2600 விமானங்கள் ரத்து

அமெரிக்காவையே கடந்த சில நாட்களாக உலுக்கி வருகிறது . அமெரிக்காவின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 2,600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அமெரிக்காவின் சுற்று வட்டார பகுதிகளில் 8 ஆயிரம் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட், பென்சில்வேனியா, மாசசூசெட்ஸ் மற்றும் வெர்மான்ட் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அமெரிக்காவில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via