நாட்டில் 41.54 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன

by Editor / 21-07-2021 05:37:39pm
   நாட்டில் 41.54 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன


நாடு முழுவதும் இதுவரை 41.54 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய சுகாதாரத் துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து,புதன்கிழமை  காலை 7 மணி வரை மொத்தம் 40 கோடியே 64 லட்சத்து 81,493 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
முதல் தவணை தடுப்பூசியை 12 கோடியே 93 லட்சத்து 89 ஆயிரத்து 636 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசியை 52 லட்சத்து18 ஆயிரத்து 414 பேரும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
அதேபோல், 45 வயது முதல் 59 வயது வரையானவர்களில், முதல் தவணை தடுப்பூசியை 9 கோடியே 86 லட்சத்து 55 ஆயிரத்து 036 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசியை 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 936 பேரும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் 60 வயதுக்கு மேலானவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 7 கோடியே 25 லட்சத்து 79 ஆயிரத்து 524 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசியை 3 கோடியே 22 லட்சத்து 89 ஆயிரத்து 633 பேரும் எடுத்துக்கொண்டுள்ளனர் என்று இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர்த்து, சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் முதல் தவணை தடுப்பூசியை 1 கோடியே 02 லட்சத்து 75 ஆயிரத்து 614 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 லட்சத்து 96 ஆயிரத்து 053 பேரும் எடுத்துள்ளனர்.
முன்களப் பணியாளர்களில் முதல் தவணை தடுப்பூசியை 1 கோடியே 78 லட்சத்து 16 ஆயிரத்து 402 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசியை 1 கோடியே 5 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேரும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
மொத்தம் 41 கோடியே 54 லட்சத்து 72 ஆயிரத்து 455 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என இந்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via