செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக அசுரத்தனமாக உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.

by Admin / 22-07-2023 12:20:52pm
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக அசுரத்தனமாக உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக அசுரத்தனமாக உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இனி மனிதர்களையே ஆளக்கூடிய நிலைக்கு ஏ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்த ப்பட உள்ளது என்பது நிதர்சன உண்மை,

இந்தியாவிற்குள் மெல்ல காலடியை வைத்து இருக்கும் ஏ ஐ தொழில்நுட்பம் ஒடிசா தொலைக்காட்சியில், ஆந்திரா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ஆங்கராக அறிமுகமாகி இருக்கும் ஏ .ஐ சௌந்தர்யா ,லிசா வியக்கத்தக்க முறையில் செய்திகளை வாசித்து அச்சு அசலாக ஒரு நிஜ பெண்மணியை போன்ற வடிவத்தோடு,  உச்சரிப்போடு செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்திய அரசும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால், இந்திய தொழில் நுட்பவியல் அறிவை இந்திய மக்கள் பெற வேண்டும் என்பதற்காக சென்னை ஐ.ஐ.டியில் உள்ள குவி  இணையதள மென்பொருள் உருவாக்க பயிற்சி மையத்தின் துணையோடு இலவசமாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

.உலக அளவில் வேகமாக பரவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புதிய மதக் கோட்பாடுகளையும்.... ஏன் நம்மையெல்லாம் ஆட்டிப் படைக்கின்ற, மாபெரும் சக்தி உடைய இறை போன்ற ஒரு செயற்கை வடிவத்தை உருவாக்குவதற்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன

. உலக மதங்களில் உள்ள முக்கியமான நூல்கள் எல்லாம் செயலிகளாக ஆக்கப்பட்டு ,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில், இறை சார்ந்த நம்பிக்கை வழிகாட்டல்களை கூட ,இனி கட்டளைகளை கூட,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு போப்பாக இருந்து.... ஒரு இமாமாக இருந்து... ஒரு மத குருவாக இருந்து... மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய காலம் கூட வெகுவிரைவில் உருவாகும் என்று சொல்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பமானது மனித சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, அது சமூகத்தில் தவறான கருத்துக்களை உருவாக்கக் கூடியதாக அமைந்து விடக்கூடாது என்பதை ஐநா பொதுச் செயலாளர் கூட வலியுறுத்தியுள்ளார். உலக மட்டத்தில் இந்த தொழில்நுட்பம் அச்சு அசலாக மனிதர்களைப் போன்று வடிவமைக்கக்கூடிய முக பாவம் அசைவுகள் குரல் தோற்ற பொலிவு அனைத்துமாக இந்த தொழில்நுட்பத்தை கொண்டு பயன்படுத்துவதால், பல்வேறு விதமான பிரச்சனைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடக்கூடும் .அறிவு தேடல்களில் கூட இன்றைக்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூக்கை நுழைத்து விட்டது .உங்களுக்கு தேவையான எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் ஒரு கட்டளையிட்டால் போதும், அடுத்த நொடிகளில் நீங்கள் பேச போகிற ...இல்லை, எழுதப் போகிற ஆய்வு கட்டுரைகளை கூட .,எல்லா இடங்களிலும் இருந்து தொகுத்து எடுத்து, உங்களுக்கு ஒரு நொடிக்குள்ளாக  தந்து விடக்கூடிய தொழில்நுட்ப தகவமைப்பை இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது. ஆக ,மனிதர்கள் சிந்திப்பதை விட... இது வேகமாக சிந்தித்து அவரவர்களுக்கு தேவையான பயன்பாட்டை வழங்கக்கூடிய வல்லமை உடையதாக இந்த செயற்கை தொழில்நுட்ப அறிவு வளர்ந்து வருகிறது .சின்ன சின்ன விஷயங்களில் நாம் ஆச்சரியமாக இதை பார்த்தாலும் கூட இது பூதாகாரமாக  வளர்ந்து, மனித உலகத்தை.... மனித சமூகத்தை அச்சுறுத்தக் கூடியதாக மாறிவிட்டால், என்ன செய்வது. எந்திரம் யோசனையையும் இது சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் .உருவாக்குகின்ற, ஒவ்வொன்றுக்கும் எதிர்மறை விளைவுகளை தரக்கூடிய ஆற்றல் உண்டு என்பதையும் நாம் மறந்து விடுவதற்கு இல்லை. ஆக, எந்த ஒரு தொழில்நுட்பமும்- மனித சமுதாய வளர்ச்சிக்கு... மனித சமுதாயத்தினுடைய நன்மைக்கானவையாக இருக்க வேண்டுமே, தவிர..... அதற்கு அழிவை தரக்கூடியதாக மாறிவிடக்கூடாது .ஆக ,இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தை அரசும், இதை உருவாக்குகின்ற நிறுவனங்களும் கவனமாக எடுத்து மக்களிடம் வழங்க வேண்டும் என்பதுதா.ன் இனி எல்லோரும் உடைய வேண்டுகோளாக இருக்கும்.

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக அசுரத்தனமாக உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
 

Tags :

Share via