கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை..?

by Editor / 24-07-2023 04:05:48pm
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை..?

தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வரிசையில் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via