தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 16 பேர் உயிரிழப்பு

by Staff / 24-12-2023 05:29:12pm
தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 16 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டில், இன்று பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. 70 பயணிகளை ஏற்றி சென்ற அந்த பேருந்து அங்குள்ள Rancho Grande பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள மான்செரா ஆற்றுப்பாலத்தில் பேருந்து பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் உயிரிழந்தனர். அவற்றில் 6 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via