இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர்
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மாலை சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மைசூரு வரும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு "தி எலிபன்ட் விஸ்பரஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி குடியிருக்கும் பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார். மீண்டும் மைசூரு விமான நிலையம் செல்லும் குடியரசுத் தலைவர், இன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை வந்தடைகிறார்.சென்னை பல்கலைக்கழகத்தின் 165 ஆவது பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.குடியரசுத் தலைவர் ஆன பின்னர் முதன் முறையாக அவர் இன்று சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :