இன்று இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி- முதல் நாள் போட்டி மதியம் 1:30 மணியளவில்....

by Admin / 22-09-2023 12:39:13pm
இன்று இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி- முதல் நாள் போட்டி மதியம் 1:30 மணியளவில்....

இன்று இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் போட்டி பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மதியம் 1:30 மணியளவில் நடைபெறுகிறது. போட்டியில் யார் வெல்வார்கள் என்கிற கருத்துக்கணிப்பில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐம்பது ஐம்பது விழுக்காடு பெற்று சம பலத்தில் இருப்பதாக கணிப்பு வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பையை கைப்பற்றிய, இந்திய அணி தம் சொந்த மண்ணில் தம் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது. உலகக்கோப்பை போட்டியில், நான்கு அணிகள் மட்டுமே இறுதிக்கு செல்லும் என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது, இந்த இரு அணிகளும் வலுவான அணிகளாக உலக அளவில் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

 

Tags :

Share via