கே.என்.ராமஜெயத்தின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

by Staff / 22-09-2023 12:47:16pm
கே.என்.ராமஜெயத்தின் திருவுருவச் சிலைக்கு  அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான மறைந்த கே.என்.ராமஜெயத்தின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கே.என்.ராமஜெயத்தின் 62வது பிறந்த நாளையொட்டி, திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இது பற்றி ட்வீட் செய்துள்ள அன்பில் மகேஷ், கலைஞரின் அன்பை பெற்று, கட்சி வளர்த்தவரும், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான, கே.என்.ராமஜெயம் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via