ப்ரீ-பெய்ட் மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து திமுக காங்கிரஸ் வெளிநடப்பு.

by Editor / 15-03-2023 10:24:26am
ப்ரீ-பெய்ட் மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து திமுக காங்கிரஸ் வெளிநடப்பு.

மின் திருட்டு, மின் பாக்கி போன்றவற்றை தடுப்பதற்காகவும் ப்ரீ-பெய்ட் மின் மீட்டர் திட்டம் கொண்டு வரப்படுகிறது.தவறான புரிதல்  காரணத்தால் ப்ரீ-பெய்ட் மின் மீட்டர் திட்டத்தை உறுப்பினர்கள் எதிர்க்கின்றார்கள், நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் ப்ரீ-பெய்ட் மீன் திட்டம் கொண்டுவரப்படும் - என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவிக்கவே அதற்க்கு சட்டமன்ற உறுப்பினர்கள் 
கடந்த ஆட்சியில் சைனாவில் இருந்து டிஜிட்டல் மீட்டர் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. எனவே ஊழல் மீது விசாரணை நடத்த வேண்டும் - கோரிக்கைவிடுத்தனர்.
ப்ரீ-பெய்ட் மின் மீட்டர் திட்டத்தை நடைமுறை படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுகா மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

Tags :

Share via