மைக்கலாஞ்சலோ

by Editor / 06-03-2022 12:53:50pm
மைக்கலாஞ்சலோ

உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ, 1475-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni).

இவர் தனது 13-வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார்.தனது 23-வது வயதில் (பியெட்டா)அன்னை மேரி,இயேசு ஆகிய இருவரது உருவங்களையும் ஒரே பளிங்குக் கல்லால் செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

 அதன்பிறகு, 17 அடி உயரத்தில்'டேவிட்' சிற்பத்தை உருவாக்கினார்.இந்தச் சிற்பம் இவரது புகழை நிலைநிறுத்தியது.இவர் எழுதிய கவிதைகளில் சுமார் 300 கவிதைகள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 மேலை மரபில் இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியர்,இசைக்கு பீத்தோவன் என்று ஒவ்வொரு துறையிலும் மகத்தான சாதனை புரிந்தவர்களின் வரிசையில்,சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்த மைக்கலாஞ்சலோ தனது 88-வது வயதில்(1564) மறைந்தார்.

 

Tags :

Share via