உச்சத்துக்கு சென்ற உளுந்து,பாசிப்பயிறு,நல்லெண்ணெய்விலை.

by Editor / 14-09-2023 08:53:31am
உச்சத்துக்கு சென்ற உளுந்து,பாசிப்பயிறு,நல்லெண்ணெய்விலை.

விருதுநகர் மார்க்கெட்டில் ரூ.9800க்கு விற்ற 100 கிலோ உளுந்து லயன் ரகம் ரூ. 700 அதிகரித்து ரூ.10,500க்கும், ரூ.6765க்கு விற்ற நல்லெண்ணெய் 15 கிலோ தும்பை ரூ.660 அதிகரித்து ரூ. 7425க்கும் விற்கப்படுகிறது.இதுபோல் துவரம் பருப்பு 100 கிலோ நயம் புதுசு லயன் ரகம், ரூ.15,500க்கு விற்றது ரூ. 1000 அதிகரித்து, ரூ.16,500க்கும், ரூ.9,000க்கு விற்ற 100 கிலோ பாசிப் பருப்பு நாடு இந்தியா ரகம் ரூ. 1000 விலை உயர்ந்து ரூ.10,000க்கு விற்கப்பட்டது.இங்கு சர்க்கரை 50 கிலோ ரூ.20 அதிகரித்து ரூ.2040, மைதா 90 கிலோ பை ரூ.4420, 55 கிலோ பொரிகடலை ரூ.4900க்கு விற்றது ரூ.200 அதிகரித்து ரூ.5100, கொண்டைக் கடலை 100 கிலோ ரூ. 7000, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.6000, 15 கிலோ பாமாயில் ரூ.1380, 50 கிலோ எள் புண்ணாக்கு ரூ.50 அதிகரித்து ரூ.2500 என விற்பனையாகிறது.துவரம் பருப்பு 100 கிலோ புதுசு நாடு வகை ரூ.13000, நயம் புதுசு லயன் ரகம் ரூ.1000 அதிகரித்து ரூ. 16500க்கு விற்கப்பட்டது. நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.500 அதிகரித்து ரூ.10,200, பாசிப் பருப்பு ரூ.500 அதிகரித்து ரூ. 11,000, 100 கிலோ வெள்ளை பட்டாணி இந்தியா புதுசு ரூ.6,500 க்கும், பட்டாணி பருப்பு இந்தியா ரூ.100 அதிகரித்து ரூ.6,400க்கும் விற்கப்படுகிறது.நாட்டு ரக வத்தல் ரூ.18,000 முதல் ரூ.21,000, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 24,000 முதல் ரூ. 26,000க்கும், முண்டு வத்தல் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையும் விற்கப்படுகிறது. மல்லி நாடு உருட்டு 40 கிலோ ரூ. 2,800, முதல் ரூ.3,100க்கும், லயன் வகை ரூ. 3,200 முதல் ரூ.3,500க்கும் விற்கப்படுகிறது. 


 

 

Tags : உச்சத்துக்கு சென்ற உளுந்து,பாசிப்பயிறு,நல்லெண்ணெய்விலை.

Share via