சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் காலமானார்

by Staff / 27-02-2024 12:57:58pm
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் காலமானார்

உத்தரபிரதேசத்தின் சம்பல் எம்.பி.யும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான ஷஃபிகர் ரெஹ்மான் பார்க் இன்று காலமானார். அவருக்கு வயது 94. அவருக்கு வயது 94. நாடாளுமன்றத்தில் இந்தியாவின் மூத்த எம்.பி.யாக இருந்த ரெஹ்மான் பார்க், சிறுநீரக தொற்று காரணமாக மொராதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவரது மறைவையொட்டி பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via