மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள்

by Staff / 01-03-2024 03:55:52pm
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள்

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் உடன்படிக்கை கையெழுத்தானது.கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறை இரு கட்சிகளும் 3 தொகுதிகள் கேட்டன. இந்நிலையில் நேற்று அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு முதலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் எம். பி. தலைமையிலான குழுவினரும், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சம்பத் தலைமையிலான குழுவினரும் அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்கள், டி. ஆர். பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், அடுத்த கட்டமாக பேசி முடிவெடுப்போம் என்று கூறி புறப்பட்டுச் சென்றனர்.

 

Tags :

Share via