ஏர் இந்தியாவின் ஊழியர்கள் 56 பேர் இதுவரை பலி

by Editor / 23-07-2021 10:36:31am
ஏர் இந்தியாவின் ஊழியர்கள் 56 பேர் இதுவரை பலி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், மக்களவையின் நான்காம் நாள் கூட்டமான இன்று கேள்வி நேரத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து பதிலளித்தார்.

"ஏர் இந்தியா ஊழியர்கள் இதுவரை 3,523 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நிரந்தர பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், தற்காலிக பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 90 ஆயிரம் அல்லது இரு மாத ஊதியமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா விமான ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் 17 நாள்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது."

 

Tags :

Share via