இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்

by Staff / 11-08-2023 03:22:57pm
இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கூட்டப்புளி கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று அதிகாலை அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த டெம்போ அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. இது தொடர்ந்து பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலூர் பாதுகாப்பு குழும போலீசார் ஜீப் மூலம் அந்த டெம்போவை துரத்தி னார்கள்.சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கன்னியாகுமரி அருகே உள்ள சங்கம்தேரி பகுதியில் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அதற்குள் அந்த டெம்போவில் இருந்து டிரைவர் குதித்து தப்பி ஓடி விட்டார். அந்த டெம்போவை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அதில் 40 பண்டல் பீடி இலை கட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஒவ்வொரு பண்டலும் 35 கிலோ வீதம் மொத்தம் 1400 கிலோ பீடி இலை இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டெம்போவுடன் அந்த பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

Tags :

Share via