306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ.நா.பூங்கொடி,

by Admin / 16-08-2023 12:49:45am
 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர்   மொ.நா.பூங்கொடி,

 

சுதந்திரத் திருநாள் விழாவை முன்னிட்டு. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது  திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் . முள்ளிப்பாடி கிராம ஊராட்சியில் நடைபெற்ற . கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ .நா.பூங்கொடி,

அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

முள்ளிப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு . சுதந்திரத் திருநாள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனி நபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு. பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரைக்கவும் கிராம சபைக் கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர கிராமஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம் (VPDP), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் அனைவருக்கும் வீடு கணக்கெ டுப்பு. தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழிதலற்ற நிலையை தக்க வைத்தல் . திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல். நெகிழிக் கழிவு லோண்மை குறித்த விழிப்புணர்வு பொது அறிவிப்புகள் . ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறதது

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்

திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல். நெகிழிக் கழிவு லோண்மை குறித்த விழிப்புணர்வு பொது அறிவிப்புகள் . ஜவ் ஜீவன் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பதிவு முகாம்கள்நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்தி, நெகிழிக்கு மாற்று பொ ருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை அடைந்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பிறப்பு முதல் 72 மாதம் வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் *ஊட்டச்சத்தை உறுதி செய்" என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கணக்கெடுக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்ப ட்டு பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை  கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு . ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் *பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" எனும் உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்று நடவு செய்து, மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மரக்கன்றுகள், 10 துாய்மைக் காவலர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பெ.திலகவதி, மாவட்ட வழங்கல் அலுவலர்  சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி வேளாண்மை இணை இயக்குநர்  அனுசுயா இயக்குநர் (ஊராட்சி) ,கருப்பசாமி. வட்டார வளர்ச்சி அலுவலர்  சுப்பிரமணி. * உதவி முள்ளிப்பாடி ஊராட்சித் தலைவர் கே.மாதவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர்   மொ.நா.பூங்கொடி,
 

Tags :

Share via