சாலைகளில் 15 நாட்கள் மேலாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவு- சென்னை மாநகராட்சி

by Admin / 18-08-2023 10:04:44am
சாலைகளில் 15 நாட்கள் மேலாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவு- சென்னை மாநகராட்சி

15 நாட்கள் மேலாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளது முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போகிறது. அதன்படி சென்னையில் உள்ள 15 நாட்கள் மேலாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்தம் செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தி நகர் ,மைலாப்பூர், கோடம்பாக்கம் ,மவுண்ட் ரோடு, திருவல்லிக்கேணி, அண்ணா நகர் ,அம்பத்தூர்  பகுதிகளில் ரோடுகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகின்ற காரணத்தினால், மாநகராட்சி முக்கியமான சாலைகளில் நிறுத்தப்பட்டு இருக்கிற வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவெடுத்துள்ளது,

சாலைகளில் வாகனங்களில் நிறுத்துவது மூலமாக சென்னை மாநகராட்சிக்கு 1.5 லட்சம் வருமானம் வருகிறது .இதனால், முக்கியமான சாலைகளில் கேட்பாரற்று கிடைக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி இறங்க உள்ளதாக ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பலர் ரோடுகளில் வாகனங்களை  நிறுத்திவிட்டு பத்து நாள் 15 நாள் கழித்து வந்து எடுக்கின்ற நிலையால் ,பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுவதோடு பல விரும்பதகாத சம்பவங்கள் நடந்து விடுமோ என்கிற அச்சத்தை உருவாக்குகிற சூழ்நிலை ஏற்படுவதால் ,இனி வாகனங்களை 15 நாளுக்கு மேலாக விடப்பட்டிருக்கின்ற வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்கிற யோசனையை மாநகராட்சி எடுத்துள்ளது.

 

Tags :

Share via