ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்

by Staff / 18-08-2023 11:23:44am
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ஓணம் சிறப்பு ரயில் தென் மாவட்டங்கள் வழியே வந்து திருவனந்தபுரம் வழியாக கொச்சுவேலிக்கு ஆகஸ்ட் 27 காலை 8 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 11.40 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் அதிகாலை 2.45 (ஆகஸ்ட் 28) தாம்பரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via