பிரபல சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் மரணம்

by Staff / 19-08-2023 04:00:22pm
பிரபல சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் மரணம்

பிரபல இளம் சீரியல் நடிகர் பவன் (வயது 25) மாரடைப்பால் இறந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழி தொடர்களிலும் நடித்துள்ளார். நேற்று அதிகாலையில் மும்பையில் உள்ள இவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. பவனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் சின்னத்திரை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரை நடிகர்கள் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via