மாணவியை பாராட்டிய கனிமொழி

by Staff / 24-08-2023 03:47:13pm
 மாணவியை பாராட்டிய கனிமொழி

உலக டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனை கே.எல்.மகிஷா பிரியங்காவுக்கு, திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைத்து பாராட்டினார். தூத்துக்குடியைச் சேர்ந்த கே.எல்.மகிஷா பிரியங்கா என்ற பள்ளி மாணவி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற இந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு கே.எல்.மகிஷா பிரியங்காவை நேரில் அழைத்து எம்.பி கனிமொழி பாராட்டு தெரிவித்தார். மேலும், இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via