ஜிம்பாப்வேயில் நீதிமன்றங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கியது.

by Admin / 10-12-2021 11:26:47pm
 ஜிம்பாப்வேயில் நீதிமன்றங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கியது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் இந்த நாட்டில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில் அங்கு நீதிமன்றங்களில் பணியாற்றி வருகிற பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டனர்.இதனால் அங்கு நீதிமன்றங்கள்  தற்காலிகமாக மூடப்பட்டன.
 இதுபற்றி அந்த நாட்டின் நீதித்துறை பணிகள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் கொரோனா தொற்று பரவல் தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற வேண்டி இருக்கிறது. இத்துடன் கொரோனா பரிசோதனைகளையும், பாதிக்கப்பட்டோர் தொடர்பு தடங்களையும் அறிய வேண்டியதிருக்கிறது. இதனால் நீதிமன்றங்கள் அனைத்தும் 2 நாட்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வெள்ளிக்கிழமை இன்று நீதிமன்றங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கியது.

 

Tags :

Share via