சந்திரயான் 3ஐ போட்டோ எடுத்த சந்திரயான் 2

by Staff / 25-08-2023 12:31:03pm
சந்திரயான் 3ஐ போட்டோ எடுத்த சந்திரயான் 2

நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் கால்பதிப்பதற்கு முன் ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர், துல்லியமாக படம் எடுக்கும் கேமரா மூலம் படம் பிடித்ததாக புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டு இருந்தது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து இதனை இஸ்ரோ டெலிட் செய்திருக்கிறது. இருப்பினும் இஸ்ரோவின் பதிவு ஸ்கிரீன் ஷாட்களாக டிரெண்டாகி வருகின்றன.

 

Tags :

Share via