அயோத்தி ராமர் கோவில்லுக்கு ரூ.11 கோடிக்கும் அதிகமாக நன்கொடை.

by Editor / 01-02-2024 11:27:15pm
அயோத்தி ராமர் கோவில்லுக்கு ரூ.11 கோடிக்கும் அதிகமாக நன்கொடை.

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை ராமர் கோயிலுக்கு வந்துசென்றுள்ளனர். ரூ.11 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கோயில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா, கடந்த 11 நாள்களில் மட்டும் கோயில் உண்டியல்களில் ரூ.8 கோடி பெறப்பட்டுள்ளதாகவும், காசோலைகள் மற்றும் இணையவழி மூலம் 3.50 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

Tags : அயோத்தி ராமர் கோவில்லுக்கு ரூ.11 கோடிக்கும் அதிகமாக நன்கொடை.

Share via