அஷ்ட லட்சுமிகள் -

by Admin / 27-08-2023 10:37:31pm
அஷ்ட லட்சுமிகள் -

அஷ்ட லட்சுமிகள் -

 

1. ஆதிலட்சுமி :-

 

பாற்கடலைக் கடந்த போது தோன்றியவள் இந்த "ஆதிலட்சுமி". இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதைக் குறிக்கிறது. இந்த லட்சுமி மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன.

 

2. சந்தானலட்சுமி :-

 

சந்தானம் என்றால் "குழந்தைச் செல்வம்" என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர குழந்தைச் செல்வம் இன்றியமையாதது. அத்தகைய குழந்தைச் செல்வத்தை வழங்குபவள் இந்த "சந்தானலட்சுமி".

 

3. கஜலட்சுமி :-

 

நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றியெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள்.

 

4. தனலட்சுமி :-

 

மனதிற்கு இனிவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று ஜொளிப்பவளே இந்த "தனலட்சுமி". வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும் "கஞ்சுகமும் அணிந்து காட்சி தருபவள் இந்த "தனலட்சுமி".

 

5. தான்யலட்சுமி :-

 

எப்பொழுதும் தன்னை நம்பியோர்க்கு அருளை வாரி வழங்குபவள் இந்த "தான்யலட்சுமி". தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவைகளை கரங்களில் உடையவள் இந்த "தான்யலட்சுமி".

 

6. விஜயலட்சுமி :-

 

எங்கும் எதிலும் வெற்றி உண்டாக வழிபட வேண்டியது இந்த "விஜயலட்சுமி". எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவள் இந்த விஜயலட்சுமி. வீரமும், கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்யத்தைப் போல வீற்றிருப்பவளே இந்த "விஜயலட்சுமி".

 

7. வீரலட்சுமி :-

 

ஒரு திருக்கரத்தில் அபயம் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி, மற்ற திருக்கரங்களில் வரிசையாக சக்கரம், வில், அம்பு, கபாலம் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருப்பவள் இந்த "வீரலட்சுமி".

 

8. மஹாலட்சுமி :-

 

தாமரை மொட்டில் வீற்றிருப்பவள் இந்த "மஹாலட்சுமி" தாயார். என்றும் மனதிற்கு இன்பத்தை மட்டுமே கொடுப்பவள் இந்த மஹாலட்சுமி. மஹாலட்சுமியை வழிபட்டால் பேரானந்தம் பெறலாம்.

 

 

Tags :

Share via