நடிகர் வடிவேலு சம்பளம்  5 கோடி...?

by Editor / 02-09-2023 07:35:58am
நடிகர் வடிவேலு சம்பளம்  5 கோடி...?

நடிகர் வடிவேலு 2006ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் கதாநாயகனாக நடித்தார். பிறகு 2008இல் மீண்டும் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். சுமார் 3 ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு, 'தெனாலிராமன்' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் அவர் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. வடிவேலு தற்போது தன் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

Tags : நடிகர் வடிவேலு சம்பளம்  5 கோடி...?

Share via