ரஜினியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

by Staff / 02-09-2023 03:21:05pm
ரஜினியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

நடிகர் ரஜினிகாந்த்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று சந்தித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஓ.பன்னீர் செல்வம், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் ரூ.600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via