நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு புகார்

by Staff / 02-09-2023 03:25:06pm
நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு புகார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பும் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி மீது இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவதூறு புகார் மனு அளிக்கப்பட்டது. அதேபோல், சேலம், ஆவடி, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மணப்பாறை, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களிலும், ஊர்களிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை காலை சோழமண்டலத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி மீது தனி புகார் மனு நீதித்துறை நடுவர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via